இன்று நேற்று நாளை 455
'ஊம் ஊம், நீ வெளியிலே நட! உனக்கிங்கே என்ன வேலை?’’
'வீல்’னு குருவிக்காரி போட்ட ஒரு அலறலில் வீடே அதிர்ந்துபோச்சு, அடுத்தாப்போலேயே 'குவா'ன்னு ஒரு புதுக் குரல்-குஞ்சுக் குரல், கொசிர்க் குரல், மொட்டுக் குரல், ஒழுங்கையுள் இருளை வெட்டிண்டு அதிலிருந்து வெளிப்படடதும் என் உடம்பு ரோமமெல்லாம் குடைக் கம்பியா விறைச்சுப்போச்சு.
தெருவே 'கொல்’னு ஆயிடுத்து.
மாமா உள்ளே நுழையறபோதே, "...ம் பேரன் பிறந்தானா?'ன்னு பல்லைக் கடிச்சுண்டு கேட்டுண்டே நுழையறார். ஆனால் இதுக்கெல்லாமா அத்தை கிணுங்கறவர்?
'இதோ, நீங்கள்தான் பாருங்களேன்!”
குழந்தையை ஏந்திண்டு அறைவாசல் படிக்கு வந்து அத்தை பொக்கைவாய்ச் சிரிப்போடு நிக்கறார்.
என் காலடியிலே பாம்பு. அத்தை குழந்தையைத் தூக்கற மாதிரியில்லை. குழவியைத் தூக்கற மாதிரிதான் அத்தையின் கை தாங்கறது. கிள்ளினால், கிள்றத்துக்கு விரலுக்கிடுக்கிலே சதை சேராது. இப்பவே அவ்வளவு அழுத்தம். கறுகறுன்னு மயிர் கண்ணிலே வழியறது. ஜெவஜெவன்னு உடல். ஆனால், பிறந்தவுடன் எந்தக் குழந்தைதான் கறுப்பாயிருக்கு?
பத்ரகாளி!
அன்னிக்கு விளக்கு வெக்கற நேரத்துக்கு அவள் புருஷன் தேசிங்குராஜன் ('ஊஷியோ ஊஷீ!") தலை முண்டாசும் குத்து மீசையும் அரைக்கோவணமுமாய் தேடிண்டு வந்துட்டான். அவளும் கிளம்பிட்டாள்.