பக்கம்:அவள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 லா, ச. ராமாமிருதம்

'வசுதேவ பாலனே அசுரகுல காலனே எழுந்திரும் யசோதா நந்தனே நந்தகுமாரனே பிருந்தாவன

நவநீத சோரனே எழுந்திரும்".

[ லோலனே

வெட வெட குளிருக்குத் தலைமேல் இழுத்துப் போர்த்திய கம்பளியுள், கிருஷ்ணன் பேரைச் சொல்லி எங்களை எழுப்பும் பாட்டு எட்டும். அம்மாவின் நடமாட்ட சத்தங்கள் கேட்கும்.

அம்மா குரல் வேய்ங்குழல் போன்றது. சத்து உச்ச ஸ்தாயியில், சற்றுத் திகட்டும் இனிப்புடன்...

கம்பளியுள் முதல் விழிப்பில் கேட்கும் இந்த முதல் ஓசைதான், அன்றைய, அன்றன்றைய நடப்புக்குக் கணித்த ஸ்ருதி என்று இப்போது நினைத்துக்கொள். எனக்கு மிகவும் பிடிக்கிறது.

***

ஆம், நினைத்துப் பார்ப்பதென்பதே ஸ்ருதி மீட்டல்தானே. சிந்தனையின் இசைவில், சிந்திக்கும் விஷயங்கள். அவைகளின் சூட்டின் அவசரமும் ஆத்திரமும் பின்னோக்கில் தணிந்து தன் தன் இடத்தில் விழுந்து அமைதி பெற்று விடுகின்றன.

இதில் அம்மா, அவளைப்பற்றி நான் எண்ணும் போதெல்லாம் - அவளை எண்ணாத நாட்களே இல்லை - அவளுடைய ஸ்வரஸ்தானத்தில், அவளுடைய எண்ணத்தில், பேச்சில், செயலில், சந்தோஷங்களில், துயரங்களில் தீர்மானமாக, கச்சிதமாக, உள்ளத்தின் வானில் ப்ரகாசிக்கிறாள்.

***

நான் தவங்கிடந்து பெற்ற பிள்ளை. திலோமம் பண்ணி, விரதங்கள் முழித்து ராமேசுவரம் போய்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/50&oldid=1496188" இலிருந்து மீள்விக்கப்பட்டது