இன்று நேற்று நாளை 457
என் அம்மாவின்மேல்விட அதிக ஆசை பொங்கும் இந்க ரூபத்தை நான் அம்மா வென்பேனா அத்தை யென்பேனா? சில சமயங்களில் எனக்கு ஒண்னுமே புரியமாட்டேங்கறது. இப்டோ இருக்கிற நெஞ்சடைப்பில் எல்லாமே ஒண்ணாத்தான் இருக்காப்போல இருக்கும்.
அத்தை கண்ணைத் திறவாமலே புன்னகை பூக்கறார். அவர் கைகளைப் பற்றி, என் கன்னங்களில் ஒத்திக்கறேன்.
'அத்தை அத்தை!! எனக்கு பிள்ளைப்பேறை நீங்களே பண்ணுங்கோளேன்!"
ஏன் அப்படிக் கேட்டேன்? எனக்கே தெரியாது. அந்த நிமிஷம்வரை அந்தமாதிரி கேட்கப்போறேன்னு எனக்குக் கனவிலும் தெரியாது; அத்தையின் கைமகத்து வம்னு நான் நினைக்க வேண்டியிருக்கு.
'ஒஹ்ஹோ!'
அந்த த்வனியில் ஆச்சரியமா? கேலியா? பரிவா?
என்ன தெரியறது? மேருவைக் கண்டறிஞ்சது யார்?
அத்தை மெதுவாய் என் பிடரியை வருடுகிறார்; குறு குறுக்கிறது. இதமாயும் இருக்கு. உறக்கம் வராப்போல இருக்கு. அத்தை என் பேச்சை, மனசை தன் கைமகத்து வத்தால் மாத்தப் பார்க்கிறார்.
'அத்தை, நான் இங்கேயே இருக்கேனே!"
'அடி அசடே, உனக்கென்ன வீடில்லையா? தாயில்லையா? முதல்பேறு முறையா உங்காத்தில்தான் நடக்கணும்.'
'அங்கே போனால் மாத்திரம் என்ன என் பிள்ளையை நான்தானே பெறனும்! நம்ம வீட்டுச் சரக்கு நம் வீட்டிலேயே பிறந்தால் ஆகாதா?’’