பக்கம்:அவள்.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தாயம்




உமா :

இன்று பிற்பகல் மயிலாப்பூர் போயிருந்தேன். உள்ளே நுழைஞ்சதும் நுழையாததுமா அம்மா, 'மாப்பிள்ளை இப்பத்தான் போனார். அவர் இந்தப் பக்கம் எட்டிப் பார்த்தே வருஷம் மூணுக்குமேல் ஆறது. என்ன விசேஷம்? ஒரு கேஸரி கிளறி, பஜ்ஜி போட்டுத் தரலாம்ன்னு பார்த்தால் இன்னிக்கு ரவையும் கடலைமாவும் கடையிலே இல்லே. தெரிஞ்சுண்டே மனுஷன் வந்தாரோன்னு எனக்கு அவர்மேலே ஆத்திரம் வந்தது. கடையிலே வாங்கினால் கடலைமாவா அது? வெறும் பட்டாணி மாவு தோச்சுப் போட்டால் எண்ணெய் பொங்கி வழியும். நம்ம வாங்கி அரைக்கற மாதிரி ஆகுமா?”

'சரி சரி... நீ அவரிடம் பஜ்ஜியைப் பத்தித்தான் பேசிண்டிருந்தையா? இல்லை, நீ போட முடியாத பஜ்ஜியைத் தின்ன அவர் வந்தாரா?”

"நான் உன்னைக் கேட்டால், நீ என்னைக் கேக்கறே. வராத மனுஷன் வந்தால், விஷயமில்லாமல் வருவாரா? அதுவும் இந்த மாப்பிள்ளை?” ' அட, உனக்கு எத்தனை மாப்பிள்ளை, இந்த மாப்பிள்ளையைத் தனியாகக் குறிக்க: சரி, என்ன விசேஷம்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/507&oldid=1497661" இலிருந்து மீள்விக்கப்பட்டது