பக்கம்:அவள்.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயம் 467

கும்மட்டியில்...கட்டம் அந்த அளவுக்கு முத்திப்போச்சு. ஆமாம்; ஒருநாள், "சாப்பிடறது ன்னா இப்போ சாப்பிடணும். போட்டுட்டுப் போறேன். அப்புறம் எனக்கு வேலையிருக்கு'ன்னேன். வேலையென்ன வேலை? டி.வி. யில் சிவாஜி. அவருக்குப் புருவம் தூக்கித்து. ஒண்ணும் பேசல்லே. படம் முடிஞ்சு நான் எதிர் வீட்டிலிருந்து வந்தால், அவர் இலையில் தனக்குப் பரிமாறிண்டிருக்கார். சாதம், குழம்பு, கறி எல்லாம் ஆவி பறக்க, என்னை நிமிர்ந்துகூடப் பார்க்கல்லே.

எனக்கு ஆத்திரம். அந்த நிமிஷத்தின் உஷ்ணத்தில், 'ஒஹோ, அப்படியா? எத்தனை நாள் நடக்கப் போறது பார்த்துடறேன்'னேன்.

இன்னும் பார்த்துண்டேயிருக்கே,

அன்னிக்கு டி.வி.யும் நன்னாயில்லே போனது தான் மிச்சம். ஒரு பாசமலர் என்ன, ஒரு பாகப்பிரிவினை என்ன, ஒரு பாலும் பழமும் என்ன... அந்த சிவாஜியை இனி காணப் போறோமோ? சிவாஜியே அந்த சிவாஜியை இனி கண்டுக்க முடியுமோ?

நடுராத்திரியில் திடுக்கென விழிப்புவந்து,படுக்கையில் எழுந்து உட்கார்ந்தேன்.சிவாஜியைப்பத்தி நினைச்சுண்டதெல்லாம் ஒருவேளை எனக்கே பொருந்துமோ? அதனால் தான் நினைப்பே அப்படி வந்ததோ? அவனைச் சொல்லும் சாக்கில் என்னையே சொல்லிக்கிறேனோ?

எட்டிப் பார்க்கிறேன். ஆபீஸ் அறையில் விளக்கு எரியறது. ஃபைலா புஸ்தகமா? சிந்தனையா? எதில் ஆழ்ந்தாலும் மனுஷன் தன்னை மறந்தான்.

***

இன்னிக்கு லேடிஸ் கிளப்பிலிருந்து வீடு திரும் பறப்போ ராத்திரி நேரமே ஆயிடுத்து. அங்கேயும் என்ன? பேரென்னவோ கேரம், பூப்பந்து, லைப்ரரின்னு பேரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/511&oldid=1497647" இலிருந்து மீள்விக்கப்பட்டது