தாயம் 473
"அதெல்லாம் எதுக்கம்மா? பெண்டாட்டி வந்துட்டா அப்புறம் என்னைத் தனிக்குடித்தனம் வெச்சுடுவேள். உங்களையெல்லாம் துறக்கணும். எனக்குக் கொஞ்சறதுக்கு குழந்தைகள் வேணும்னா, உங்கள் பையனின் பசங்கள் இருக்கான்களே! இந்த சந்தோஷத்துக்கு கொடுத்து வெச்சிருக்கணும். என்னை ரொம்பக் கெடுபிடி பண்ணினேன்னா, என் காசிப் பயணம் ஒத்திதான் போட்டிருக்கு!" என்று பாதி தமாஷ், பாதி மெய்யாக --
ஒருநாள் நானும் அவனும் தனியாயிருக்கையில் கேட்டடன்: 'ஏன் சாம்பு, நீ பிரம்மசாரியா, கல்யாணம் ஆகாதவனா? உனக்கு செக்ஸ் தேவைப்படவில்லையா?" நாங்கள் சகஜமாகவே பழகினோம்.
'சொல்லித்தான் ஆகணுமா?' என்னை ஒருமாதிரியாகப் பார்த்தான்.
சொல்லேன், என்ன ஆகிவிடப் போறது?’ ஆனால் அவன் பார்வை அலரிப் போயிருந்தது,
"சரி சொல்றேன். நான் வீட்டை விட்டு ஓடிவந்ததே அதே காரணம்தான். இவாளுக்குக்கூட உண்மை தெரியாது. உன்னிடம் சொல்றேன்.
நான் இப்போ சொல்ற கட்டத்தில், என் வீட்டில், ஒண்டுக் குடித்தனமா ஒரு ஜோடி வந்தது. குழந்தைக் குட்டியில்லை. மாமிக்கு முப்பது வயசிருக்கும்-வாட்ட சாட்டமாயிருப்பாள்.
ஒரு மத்தியானம் வீட்டில் எங்கள் இருவரைத் தவிர யாருமில்லை,
"சாம்பு, தாயக்கட்டான் ஆடலாமா?
ஆட்ட சுவாரஸ்யம். காய் நகத்தற சிக்கலான யோசனையில் மாமி எழுந்து போனதுகூடத் தெரியல்லே. கதவுத் தாழ்ப்பாள் விழற சத்தம் கேட்டுத் தலை நிமிர்ந்தால்--