473 லா. ச. ராமாமிருதம்
சாம்பு கண்களைப் பொத்திக் கொண்டான். அந்தத் தருணம் அவனை இப்போது ஊடுருவுகையில் உடல் பூரா ஒருமுறை அவனுக்குக் குலுங்கிற்று.
'அவள் என்னை அழிச்சாள்; நான் பஸ்மமாப் போனேன்னுதான் சொல்லணும். அந்தக் காரியத்துக்கு, அதுவும் அவளோடு, நான் இன்னும் தயாராகல்லே... என்னவோ அருவருப்பா, அசிங்கமா அந்த 'ஷாக்'தான் மிச்சம். அந்தச் செய்கையில் எனக்கு எந்தப் பங்கு மில்லை.
அவளுக்குக் காரியம் முடிஞ்சதும் அவள் ஆடையைச் சரிப்படுத்திக் கொண்டே,
சாம்பு நீ No Good, ஆனால் எனக்கு யாருமே No Good. என் அதிர்ஷ்டம்...சாம்பு, நீ சமத்தாயிருப்பேன்னு நினைக்கறேன். இல்லாட்டா, உன் பாடுதான் கஷ்டம், விவகாரம்னு வந்தால் உன்னை நம்புவாளா? நான் சொல்றதை நம்புவாளா? நீயே யோசனை பண்ணிக்கோ."
என்னைச் செல்லமாகக் கன்னத்தில் தட்டினாள்.
அப்புறம் எனக்கு வீடே கிலி ஆயிடுத்து. எந்த சமயத்தில் என்ன பண்ணுவாளோ என்கிற பயத்தோடு அங்கே என்னால் வாழ முடியல்லே. வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். அன்னி தாயக்கட்டானை ஆயுளுக்கும் என்னால் மறக்க முடியாது. அது தாயக்கட்டானே அல்ல. நான் மாட்டிக்கொண்டு, இன்னமும் வெளியேற முடியாமல் தவிக்கும் சிலந்திவலை! ரவி, நீ இப்போ சொல்லணும்.’’ என் கைகளைப் பற்றிக்கொண்டான். 'நான் பிரம்மசாரியா, கல்யாணமாகாதவனா?”
அவன் விழிகளைப் பார்க்க சகிக்கவில்லை. தலை குனிந்தேன்.