பக்கம்:அவள்.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயம் 481

தாரசுராமன் இறந்து அவன் அதிக நாளில்லை. ஆறு மாதங்களுக்குள் ஒருநாள்-ஒரே நாள் ஜூரம்...நான் தான் கொள்ளி இட்டேன். அப்படித்தான் அவன் கடைசி இஷ்டம். ஆயுளுக்கும் கிளைக்க முடியாதபடி பஸ்பமாகி விட்டவனுக்கு என் கொள்ளி அதிகப்படி. அதனால்தான் அவன் இஷ்டம் அப்படியோ?

***

உமா:
'ஹல்லோ, உமா ஸ்பீக்கிங்...அங்கே யாரு? ஒ ராதா என்ன விசேஷம்? ஒ! நோ, தாங்க்யூ. Don't feel like it. Not in the mood, sorry, some other time... வெட்சுட்டுமா? Bye; Bye...”

'ஷாப்பிங்காம்..."
I hate shopping.
I hate T.V.
I hate pictures.
I hat Myself
above all
I hate you—you...

***

எப்போ எங்கள் பாதை பிசகிப் போச்சு? இன்னும் வெளிச்சமாத் தெரியல்லே. எப்படிவும் மாமியாரும் ஸ்ரீதரும் இருந்தவரை மேலுக்கு வரல்லே.

மாமியாரின் அந்திம காலத்துலே அவர்தான் எல்லாம் செய்தார். எல்லாம்னா, எல்லாமே...ஆமாம். யாராவது ஒருத்தர் செய்யனும்! அம்மாவுக்குப் பிள்ளை செய்யறார் செஞ்சுட்டுப் போகட்டுமேன்னு நான் எனக்கு சமாதானம் சொல்லிண்டாலும், அம்மாவுக்குப் பணிவிடை விஷயத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/519&oldid=1497633" இலிருந்து மீள்விக்கப்பட்டது