பக்கம்:அவள்.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

478 லா. ச. ராமாமிருதம்



அப்போது என்னை அணைச்சாற்போல் என் தோள் மேல் அவர் கைப்பட்ட இடத்தைத் தொட்டுப் பார்த்துக்கறேன். பிரயோசனம்...? அது அந்த நாள்.

எந்த நாள்? அதுதான் புரியல்லை. நானா நெனைச்சுக்கற நாளோ?

அது அது அப்படி அப்படி விட்டுப் போச்சுன்னா விட்டுப் பொனதுதான். அப்புறம் ஒட்றதுன்னா சதையோடு சேர்ந்து வளர்றது கிடையாது. கோந்து. Fevicol போட்டு ஒட்டிக்கற சமாசாரம்தான்...அதுதான் பயமாயிருக்கு,

“No sun in life
No fun in life
Life is not for fun, my gal
it may be a big joke
But certainly on fun.”

இதை நான் சொல்லவில்லை. என்னிடம் இந்தபாஷை ஏது? ஆனால் நள்ளிரவில் விழிப்பு வந்து, இனி தூக்கத்தில் இமைகள் மூடாது எனத் தெரிந்தபின், ஜன்னல் வழி நிலவு மயக்கும் முழுநிழல் அரைஒளி முக்கால் இருள் நிலையில், நிலைக்கண்ணாடியிலிருந்து என் முகம், எனக்கே புது முகமாக-அப்பவும் என்னிடம் சொல்லவில்லை. இவ்வார்த்தைகளைச் சிரிக்கிறது. ஜன்னல் கம்பிகளின் நிழற்கோடுகளே புலியின் வரிக்கோடுகளாக மாறிக் காட்டும் மருள் நேரம்.

ஸ்ரீதர், இந்த நேரத்தில் நீ என்ன பண்ணிக்கொண்டிருப்பாய்? உன் ஊரில் இப்போ பகலா, விடிவேளையா? தனியாயிருக்கே. அம்மாவை நினைக்கிறாயோ? சிகரெட், சிகரெட்-? இந்தப் பழக்கம் எல்லாம் இங்கிருக்கும்போது உனக்கு இல்லை. ஆனால் தனிமையைக் கொல்லும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/522&oldid=1497626" இலிருந்து மீள்விக்கப்பட்டது