பக்கம்:அவள்.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயம் 479

சாக்கில் தானே இந்தப் பழக்கம் ஆரம்பிக்குமாமே..? ஆனால் சிகரெட் இப்போ யார் பிடிக்கல்லே? அதைக் கெட்டபழக்கம், பாபம் என்று சொன்ன நாளெல்லாம் போயிடுத்து, அத்தோடு நிக்கறயா...இல்லை. இன்னும் வேறு ஏதானும்?

நானா நெனச்சுக்கறேன், நானே என்னைப் புண் படுத்திக்கறேன். நானே அனாவசியமா அதியாயம் நினைக்கிறேன். எனக்கே தெரியறது. ஆனால் மனசு என்கிறது அதற்குத் துணையுமில்லாமல்-சும்மா இருக்க மாட்டன்கறதேடா... என்னடா செய்வேன், என் மகனே? சுருக்க வந்துடேன்! முடியல்லேடா!

***

ன்று பிற்பகல் சுமார் மூனுக்கு பழைய ட்ரங்கை- எதுக்குன்னுகூட மறந்துபோச்சு. இப்போ கொஞ்ச நாளா அடிக்கடி Current Off-னு மெழுகுவத்திக்கா...? கொசு உபத்ரவம் பொறுக்காமல் டார்ட்டாய்ஸ் பாக்கெட்டுக்கோ?வேலைக்காரிக்குப் பழம்புடைவைக்கா? இல்லை. அது அது அப்பப்போ அகப்படறப்போ எல்லாத்துக்குமேவா? ட்ரங்கைக் குடையறப்போ. ஒரு ப்ளாஸ்டிக் தம்ளரில் பித்தளைத் தாயக்கட்டை ஒரு ஜோடி, சோழி, புளியங்கொட்டை, ஒரு சாக்பீஸ் உள்பட.இது இங்கே எப்படி வந்தது? அம்மாவின் வேலையாத்தான் இருக்கும்.

மாகாளிக்கிழங்கு ஊறுகாயோடு Biz பவுடர்! வடாத்துடன், கருவேலம் பட்டைப்பொடி! (இங்கே தேய்க்கறது பேஸ்ட். ஆனால் அது பற்றி அவளுக்குக் கவலையில்லை.) விளக்குக்குப் பஞ்சுத் திரிக்கட்டு, இதுமாதிரி அப்பப்போ அனுப்புற் சீரோடு இதுவும் வந்து இங்கு அடைச்சிருப்பேன்.

வாசற்கதவு Bell சத்தம் கேட்டுப்போய்த் திறந்தால் இவர் நிக்கறார். ஆனால்... இதென்ன கூத்து? ஆச்சரியத்தில் பின்னடைந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/523&oldid=1497624" இலிருந்து மீள்விக்கப்பட்டது