பக்கம்:அவள்.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

482 லா. ச. ராமாமிருதம்



யிடையே வரக்கூடாது. ஆனால் வந்துவிட்டது. யார் மேல் தப்போ யார் மேலானும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் வந்துவிட்டபின் பரீட்சை நடந்தே ஆகணும். நடக்கட்டும். இதற்கு ஒரு முடிவு கண்டாகணும். அதற்காகத்தான் இப்போ சொக்கட்டான் ஆடப் போகிறோம், பணயத்துக்கு"

'பணயமா?'-ஆச்சரியத்தில் நிமிர்ந்தேன்.

"Yes,"

'அஞ்சு பைசா, பத்து பைசா?"

'ஏன், அதைவிடப் பெரிதாக உன்னால் நினைக்க முடியல்லையா?”

"ரூபாய்."

புன்னகை புரிந்தார்.

பெரிய ரூபாய்க்கு நான் எங்கே போவது? என் நகைகளைக் கேக்கறேளா?"

பெருமூச்செறிந்தார். 'ஆட்டத்தைத் துவங்குவோம். முடிந்து, கெலிப்பு தோற்பு நிச்சயமான பின் சொல்கிறேன்."

நலமே. Childish.”

அதென்ன அவ்வளவு சுலபமாகச் சொல்லிட்டே?” கட்டானின் நடுக்கோடுகளையும் மலைகளையும் பட்டை திட்டிக்கொண்டு அதைத் தெளிவாக்குவதில் அவர் கவனம் ஆழ்ந்து

அந்த நெற்றியில் அகலமும் கறுகறு புருவங்களும், புருவமத்தியில் ஒரு வடு-செதுக்கினாற்போன்ற அந்த வாயும்-இப்பத்தான் பளிச்செனத் தெரியறது. Mr. G. ரவிச்சந்திரன், You are a Handsome Man...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/526&oldid=1497572" இலிருந்து மீள்விக்கப்பட்டது