பக்கம்:அவள்.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

488 லா. ச. ராமாமிருதம்



இதென்ன முதல் கடிதமே முகத்தில் அறையற மாதிரி ஆரம்பிக்கிறது என்று தோன்றுகிறதோன்னோ? சரி, நான் அசடு, போங்கோளேன்; திருப்திதானே? நான் வெகுளி, எனக்கு மனசில் ஒண்னும் வைத்துக்கொள்ளத் தெரியாது. அப்பாகூட அடிச்சுப்பார்: ஜகதா கிட்டே யாரும் அசதி மறதியாக்கூட ஒரு ரகஸ்யத்தைச் சொல்லிடாதேயுங்கள். ஒருத்தர்கிட்டேயும் சொல்லக் கூடாது என்றால் ஒரு கடிதாசுத் துண்டிலாவது அதை எழுதி எறிந்துவிடுவாள். இல்லாவிடில் அவளுக்கு மண்டை வெடித்துவிடும். ஜகதா அவ்வளவு ஆபத்தான மனுஷி. ஆமாம், அப்படித்தான் வைத்துக்கொள்ளுங்கள், நான் பின் யாரிடத்தில் சொல்லிக்கொள்வது, தலை தீபாவளிக்கு என் கணவர் என்னுடன் இல்லாத கஷ்டத்தை? என் அப்பா அம்மாவுக்கு எழுதலாமா? எழுதினால், புக்காத்து விஷயங்களைப் பிறந்த வீட்டுக்கு விட்டுக் கொடுத்தேன் என்கிற பொல்லாப்பைக் கட்டிக் வா? நான் அசடாயிருக்கலாம்; ஆனால் அவ்வளவு அசடு இல்லை. அப்புறம் எனக்கு யாரிருக்கா; நீங்களே சொல்லுங்களேன்!

தீபாவளிக்கு இரண்டு நாளைக்கு முன்னால் அம்மா வந்திருந்தாள், ஆசையா பெண்ணையும் மாப்பிள்ளையையும் தலை தீபாவளிக்கு அழைத்துப் போகனும் என்று. நீங்கள் ஊரில் இல்லை, இருக்கவும் மாட்டேள் என்று தெரிந்ததும் அவள் முகம் விழுந்ததைப் பார்க்கனுமே, எடுத்து மறுபடியும் சேர்த்து ஒட்ட வைக்கிற தினுசாய்த் தானிருந்தது.

'சரி, மாப்பிள்ளைதான் இல்லை. ஜகதாவைக் கூட்டிக்கொண்டு போகிறேனே! நாங்களும் பிரிஞ்சு கொஞ்ச நாளாச்சு. உங்களிளிஷ்டப்படி கல்யாணமாகி நாலாம் நாள் கிருஹப் பிரவேசத்துக்கு விட்டதுதானே!" என்று சொல்விப் பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/532&oldid=1497555" இலிருந்து மீள்விக்கப்பட்டது