பாற்கடல் 493
'ஏ குட்டி, எனக்குத்தான் கண்சதை மறைக்கிறதா? கிணற்றில் ஜலம் இருக்கா?"
"இருக்கிறதே!'
"குறைஞ்சிருக்கா?’’
"இல்லையே, நிறைய இருக்கே!”
"இருக்கோன்னோ? அதான் கேட்டேன்; அதான் சொல்ல வந்தேன், கிணற்று ஜலத்தை சமுத்திரம் அடித்துக்கொண்டு போக முடியாதுன்னு! நேரமாச்சு. சுவாமி பிறையின் கீழ் கோலத்தைப் போடு- என்று குஞ்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே போய்விட்டார்.
நான் கிணற்றடியிலேயே இன்னும் சற்று நேரம் நின்றிருந்தேன். நெஞ்சில் சின்னதாய் அகல் விளக்கை ஏற்றி வெச்ச மாதிரியிருந்தது. மேலே மரத்திலிருந்து பவழமல்லி உதிர்ந்து கிணற்றுள் விழுந்து கொண்டிருந்தது. தும்பையறுத்துக்கொண்டு கன்றுக்குட்டி முகத்தை என் கையில் தேய்த்துக் கொண்டிருந்தது.
இந்த வீட்டில் யார் தான் பளிச்சென்று பேசுகிறார்கள்? வெளிச்சம் எல்லாம் பேச்சில் இல்லை. அதைத் தாண்டி அதனுள்தான் இருக்கிறது.
ஆனால் ஊமைக்கு மாத்திரம் உணர்ச்சி யில்லையா? அவர்களுக்குத்தான் அதிகம் என்று சொல்லக் கேட்டிருக் கிறேன். ஆனால் நீங்கள் அசல் ஊமையில்லையே, ஊமை மாதிரிதானே! எனக்கு *ரெஸ்பெக்டே' இல்லையோன்னோ? ஆமாம், அப்படித்தான் போங்கோ!! நான் உங்களுக்கு இப்போ கடிதம் எழுதவில்லை. உங்களுடன் கடிதத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். இல்லை. கடிதாசியில் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் யோசனை என்னுடையது. அதை யாராலும் தடுக்க முடியாது.