12 லா, ச. ராமாமிருதம்
யாரை விட்டது?" என்று கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறோம். தத்துவம் பேசுகிறோம். சிரிக்கிறோம்.
விவஸ்தைகெட்ட ஜன்மா. ரோசம் கெட்ட பிழைப்பு.
ஆனால் திருடனுக்கும் கன்னக்கோல் சார்த்த மூலை வேண்டும்.
***
என் கசப்பில் நான் சொல்கிறேன்.
ஆனால் அம்மாவிடமிருந்து இதுவரை ஒரு வார்த்தை வந்ததில்லை.
அம்மா வெளிக் காண்பித்துக் கொள்ளமாட்டாள். அது அவள் சுபாவம்.
ஆனால் இப்போதெல்லாம் அவ்வப்போது நெஞ்சைத் தடவிக்கொள்வாள்.
‘விடமுண்ட கண்டன்' தேவாரத்தில் வருகிறதோ?
உள்ளே இறங்கவில்லை.
"என்னம்மா பண்றது?"
"நெஞ்சை அடைக்கிறது சாியாப் போயிடும். குடிக்கத் தண்ணீா் கொடேன். ஊம், அம்மாடி! சாியாப் போயிடுத்து Gas அடைச்சிருக்கு."
***
ஆனால் சாியாய்ப் போய்விடவில்லை. இந்த நெஞ்சடைப்பு மாதம் ஒரு முறையிலிருந்து இரு முறையாகி, அப்புறம் வாரம் இரு முறை, அப்புறம் தினம், எப்போ வேணுமானாலும் வேளையே கிடையாது.
உயிா் விடுதலைக்குத் தயாராயிருக்கிறது. உடல்தான் லேசில் அதை விடுவதில்லை. உயிரோடு பூமியில் விழுந்த