அம்மா 13
திலிருந்து இத்தனை காலம் உயிருடன் பழக்கம், உடல் தன் அழிவை லேசில் ஒப்புக்கொள்வதில்லை. பிடியை லேசில் விட மறுக்கிறது.
"எங்கே ஆபீஸுக்குக் கிளம்பறியா?"
"ஆமாம்"
"ஒரு நிமிஷம் என்னை உன்மேல் தாங்கிக்கோயேன். அதனால் என் அவஸ்தை குறையப் போவதில்லை, ம்னசுக்குத்தான் ஏதோ ஆறுதல், அம்மாடி!'
"ஒரு வேடிக்கை பார்த்தையா? அன்று நீ குழந்தையா இருந்தபோது மடியில் வளர்த்திண்டேன். இன்று என் வேளையில் உன் தோள்மேல் சாஞ்சுக்கிறேன். கணக்கு, சரியாப்போச்சு இல்லே?"
லேசாகச் சிரிக்கிறாள்.
***
அன்று-என்றோ.
கிராமத்துக்குப் போயிருந்தேன். பழைய நினைவுகளின் ஈர்ப்பு அங்கே, நாங்கள் விட்டுப் போன கிராமம் இல்லை. மின்சாரம், வானொலி, ஒலிபெருக்கி, இரைச்சல் எல்லாம் புகுந்தாச்சு. நாட்டில் கிராமங்களே இப்போது இல்லை. அது ஆறுதலுமில்லை.
எதிர் வீட்டில் முதலியார், அவர் குடும்பம்? இடமே சிதிலமாயிருந்தது.
ஸில்லி, நீ வரும்வரை காத்திருப்பார்களா? என்ன எதிர்பார்க்கிறாய்? காத்திருக்கணுமா? எங்கள் வீடு, ஆவலுடன், ஆசையுடன் வாசற்படி மிதித்ததும் குரைத்துக்கொண்டு ஒரு நாய் வெளியே வந்தது.