பக்கம்:அவள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi


ஏதோ ஞாபகம் வந்து என் கைகளினின்று அவசரமாய் இழிகிறாள்.

“சீகாந்த் எங்கே? சின்னியக்கா எங்கே?"

தோளைக் குலுக்கிக்கொண்டு உடம்பை ஆட்டிக் கொண்டு உள்ளே ஒடுகிறாள். அவள் செய்கைகளை, அங்க அசைவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலே எனக்குப் போதும். அவளாவே வந்து என்மேல் ஆசையாக மோதும் சமயங்களே போதும் ஆனந்தம் கண்டுவிடுகிறேன். இன்னும் ஒரு வாரத்துக்கு அவள் ப்ரஸ்ன்னம் என்னுள் ஒளிரிக்கொண்டிருக்கும்.

வரைந்த கோடு மாதிரி ஸ்ன்னமாயிருக்கிறாள். இன்னும் கொஞ்சம் சதைப்பிடிப்பாயிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! சாப்பிட ரொம்பவும் படுத்தறாள்.

இன்னும் இரண்டு பூர்த்தியாகவில்லை. கொள்ளைப் பேச்சு. ப்ரமிக்கும்படி அஸாத்யமான ஞாபகம்.

மாலைப் பொழுது காற்று வாங்க வாசற்குறடில் உட்கார்ந்திருக்கிறோம். காற்றும் தயை புரிகிறது.

குழந்தை உள்ளேயிருந்து வருகிறாள்.

வீட்டுக்கு வேலியுள், குறடோரமாயிருக்கும் பிள்ளையார் கோயில் வாசற்படியில் நெற்றியை வைத்துக் கொண்டு, "பிள்ளையாரப்பா! பாட்டி, தாத்தாக்கு ஒம்பு சரியாப் போனும்!” என்று வேண்டிக்கொள்கிறாள்.

அவள் அப்பனும் ஆயியும் சொல்விக் கொடுத்த வார்த்தைகள்தான். லார்த்தைகள் மற்றவரது. ஆனால் வேண்டிக்கொள்ளும் நம்பிக்கை அவளுடையது. பிள்ளையாரப்பா அவள் சொன்னபடி கேட்டார். அவளுக்குச் சந்தேகமே கிடையாது. நம்பிக்கையை, அதன் பெயர் நம்பிக்கை என்று அறியாது, ஆனால் நம்பிக்கைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/6&oldid=1495831" இலிருந்து மீள்விக்கப்பட்டது