பக்கம்:அவள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள்


சமீபத்தில் நண்பர் ஏ. கே. பாலுவிடமிருந்து மணக்காவில் இருக்கிறார்-தபால் வந்தது. எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துடன், பெருந்திருவின் போட்டோ படம் அனுப்பியிருந்தார். போட்டோ படம் என்றால் போட்டோ மாதிரிப் படம் பின் என்ன, மூலவரைப் புகைப்படம் எடுக்க விடுவார்களா?

ஆனால் படம் தத்ரூபமாக இருந்தது. எங்கள் குலதெய்வத்தை நேரே பார்க்கிற மாதிரியே தோன்றிற்று. நான் லால்குடி போய் ஐந்து வருஷங்களுக்கு மேலாகிறது.

முன்பெல்லாம் இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறையேனும் அந்தப் பக்கம் போய் வர நேரும்; அல்ல, வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்வேன். எனக்கு இயல்பாவே ஊர் சுற்றும் பித்து உண்டு.

தஞ்சாவூர், திருச்சி, லால்குடி, மதுரை, நாகர்கோயில், திருவனந்தபுரம், கன்யாகுமரி-அப்படி ஒரு ரோந்து. கூேத்ராடனம் இல்லை (இருந்தால்தான் என்ன?) அங்கங்கே தங்கி, நண்பர்களைச் சந்திக்க, இலக்கியம் பேச, அரட்டையடிக்க, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள, புதுமுகங்கள் பார்க்க, புதுமுகம் பழைய முகம் எல்லா முகமும் ஒரு முகம் எனும் உண்மை தெளிய, அதில் ஆச்சர்யமுற, அந்த ஆச்சர்யத்தின் இன்பத்தில் திளைக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/60&oldid=1496237" இலிருந்து மீள்விக்கப்பட்டது