"ஒ, இருக்கேனா என்ன?”
மெளனம்.
சற்றுப் பொறுத்து மனமில்லாத பேச்சில் "இன்னிக்கு எதிர் வீட்டிலே அடுப்பு புகையல்லே போல இருக்கு."
இப்பப் புரிந்தது.
"யாரும் வெளியிலேயே வரல்லே, உள்ளேயே முடங்கிக் கிடக்காப்போல இருக்கு." புருஷன் வயணமில்லாட்டி ஒரு சமயம் இல்லே ஒரு சமயம் இது நேர வேண்டியதுதானே?”
அம்மாவின் பார்வை என்னை ஆழ்ந்து சிந்தித்தது. சற்றுக் குழிவான கண்கள், விளக்குபோல் திரி போன்ற விழிகள். என் பார்வை பின் வாங்கிற்று.
"இப்படித்தான் நேரும்னா நேர்வது நியாயம் என்கிறையா? நஞ்சானும் குஞ்சானுமா...' வாயடைத்துப் போனேன்.
பெருமூச்செறிந்தாள். எழுந்து உள்ளே போய் வெளி வந்தபோது கையில் பையோடு வந்தாள். பை கனத்தது. மெதுவாக வாசற்படியிறங்கிச் சென்றாள்.
சுவரில் பல்லி, விட்டிற் பூச்சிகளை வேட்டையாடிக் கொண்டிருந்தது. "லபக் லபக்." வன நியாயம், வன நியாயத்திலிருந்து குவாயட் வரை எங்கெங்கோ யோசனை திரிந்தது.
அம்மா திரும்பி வந்தபோது அவள் முகத்தில் மூட்டம் கலைந்திருந்தது. பிரகாசமாகவேயிருந்தது. வந்து என் அருகே உட்கார்ந்தாள். மஞ்சள் பூத்த நரை, சிங்கப்பிடரி. இப்பவும் நல்ல அடர்த்தி. பெருமையாயிருந்தது.
"இன்னிக்கு வழிபண்ணினதால் இவாள் பிரச்சினை தீர்ந்துவிடவிலலை. இது வழியும் இல்லை. எனக்குத் தெரியும், ஆனால் இன்று போச்சா. நாளைக் கதை