சங்கு புஷ்பம் 33
'நீங்கள் நினைக்கிற மாதிரியில்லை. எங்கள் நாட்டில் நிறைய மக்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். கல்வியை மேலும் மேலும் படித்துக்கொண்டேயிருப்பதுதான் எங்கள் முதலீடு. எங்களுக்கு மனிதர்கள் வேண்டும்; உறவு வேண்டும். மரணத்தின் அருகாமையே எங்கள் உறவை இன்னும் இறுகப் பிணைத்துவிட்டது. எழுத்தைக் காட்டிலும் மனித உறவுக்குப் பிணைப்பு எது? காலம், இடம், கடல் தாண்டியும் எழுத்தால்தானே நாம் ஒருவரையொருவர் தொட்டுக்கொள்ள முடிகிறது! இதோ இந்தப் புத்தகம் உங்கள் நாவல் 'கழுகு' புத்தகத்தை எடுத்து ஆட்டினார். விலை ரூ 20-50 போட்டிருக்கிறது. எங்கள் நாட்டில் இதற்கு இதுபோல் நாலு பங்கு விலை. அப்படியும் கிடைத்தால், வாங்கிப் படிப்பவர்கள் இருக்கத் தான் இருக்கிறோம்."
இது 'நான்' இன் ஆவேசம் இல்லையா?
நம்பிக்கையின் தரிசனம்,
நம்பிக்கையிலிருந்து விளைவது தைரியம். ஹெமிங்க்வே தைாியத்தை (Courage is) ‘Grace under Pressure" என்கிறான். வீடு எழும்பினதும் சாரத்தைத் தட்டிவிடுவது போல நம்பிக்கையைத் துறந்த தைரியம் விரக்தி.
துல்லியமான 'நான்’
இலங்கை நண்பர் இதைத்தான் சித்திரிக்கிறார். அல்ல அதுவாவே விளங்குகிறாரா?
படுக்கப் போமுன் அவள் எதிரே நிற்கிறேன். ஒரு சின்னப் படத்திலிருந்து தர்க்க ரீதியில், விசுவரூபம் எடுத்த ஸர்வ "நான்" - அந்த அருவ 'நானை' இதோ என் சிறுமையில் என்னால் ஜரிக்க முடியாது. எதிா்நோக்கி, அண்ணாந்து நோக்கி, முறையிட்டுக் கொள்ள, என்
அ.- 3