பக்கம்:அவள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 லா. ச. ராமாமிருதம்

தென்புக்கு அவ்வப்போது பார்த்துக்கொள்ள எனக்கு அவள் வேண்டும். ஸ்ரீமதி என் பெந்துப்பாட்டி. திருவாசியை அடைத்துக்கொண்டு ஆள் உருவத்தில், தலைமுறை தலைமுறையாக எனக்காக நின்றுகொண்டிருக்கிறாள்.

"அம்மா, நீ லோகமாதா, உனக்கு தாய் யார்?"

"......"

"உனக்குத் தாயில்லையா?”

"......."

"நீ அனாதி. ஆனால் அனாத பந்து."

லேசாக மின்சார விளக்கு மங்குகிறது. (லோடு மாற்றம்) இன்று காலை படத்து ஆணிக் கொக்கியில் சொருகிய சங்கு புஷ்பம் வதங்கி விழுகிறது.

அவளுடைய பதில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/78&oldid=1496337" இலிருந்து மீள்விக்கப்பட்டது