பக்கம்:அவள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 வா. ச. ராமாமிருதம்

லலிதா ஸஹஸ்ரநாமத்தில், நாமத்துக்கு நாமம் உன்னைப் புகழ்கிறான்.

ஸெளந்தர்ய லகரியில் அங்கம் அங்கமாக வர்ணிக்கிறான்.

'அம்பா ஸாம்பவி சந்திரமெளளி
ரபலாபர்ணா உமா பார்வதி
காளி ஹைமவதி ஸிவாத்ரிநயனா
காத்யாயனி பைரவி
ஸாவித்ரி 'நவயெளவனா ஸுபகரீ..."

அர்த்தம் முழுக்க ஆகவில்லை. (வேண்டுமா என்ன?) ஆனால் வரிக்கு வரி சொற்களை, நாக்கில் உருட்டிச் சுவைப்பதே ஒவ்வொரு சமயமும் புது அனுபவம். என்ன இது தேவி? எனக்கு நினைவுமுகம் அவனுக்குக் கண்ட முகம் ஆகிவிட்டாயா?

இல்லை. நீ யாருக்கும் நினைவுமுகம்தான். உன் தன்மையே அப்படித்தான். ஆனால் அவரவர் நினைவின் ஆழம் வெவ்வேறு. அவரவருக்கு நீ தென்படும் விதங்களும் அந்தந்த ஆழத்துக்கேற்பத்தானே!

'ஜ்வாலாமுகி:

நினைத்துப் பார்க்கிறேன். "ஜெவ ஜெவ" உன் முகம் -(சங்கரனே சொல்கிறான் தியானத்துடன் கற்பனையும் சேர வேண்டும் ) கோபத்தினாலா? கோபம் யார் மேல்? ஆனால் உன் கோபத்துக்குக் காரணமும் வேண்டுமா? வெட்கமா? நீ ராஜரஜேஸ்வரி ஆளும் வம்சம். வெட்கம் என்று உண்டு என்று அறியாயோ? ஆனால் நீ பெண் ஆனதால் நீ அறியாமலும் நாணம் உன் அணிகலன். அதனால் நீ ஜ்வாலாமுகி, கன்யாகுமரி, தபஸ்வனி. அதனால் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/84&oldid=1496388" இலிருந்து மீள்விக்கப்பட்டது