பக்கம்:அவள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ix


"மத்யானம் மூணு மணியிருக்கும். நாளைக்கு எடுப்பாங்க." குரலில் எந்த உணர்ச்சியுமில்லை. சேதி சொன்னதோடு சரி. எதிர்பார்க்கவும் முடியாதோ? ஒரு வருடம் படுக்கையாக் கிடந்தால் இதுதான் கதியா?

பாலில் தண்ணிர் ஊற்றினாளோ, தண்ணிரில் பாலை வார்த்தாளோ, அதையும் குடித்துத்தானே பதினெட்டு வருடங்களாக எங்கள் குடும்டம் வளர்ந்திருக்கோம்? "ஆயாப் பால்" என்றே வீட்டில் வழக்கில் வந்துவிட்டது.

உடல் வசத்திலிருக்கும்போது, வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையில், ஹைமவதியிடம் சொன்னாளாம்: "நான் செத்துட்டா, ஐயாவும் நீயும் என் பொனத்தைப் பார்க்க வரணும். பொண்னு வேணாம். கொளத்தை பயந்துக்கும்."

ஆகவே நாளைக்கு ஆயா வீட்டுக்குப் போய்த்தான் ஆகனும். ஆயா சொல்லை நிறைவேற்றியாகணும். இது என்ன ஆயா மேல் அன்பா? இது எந்த நம்பிக்கையைச் சேர்ந்தது? இது முழுக்கவே மூடம் ஆகுமோ?

No, it is a point of honour. அப்படியென்றால் என்ன? உயிருக்குக் கொடுக்கும் கெளரவமா? சாவுக்குக் கொடுக்கும் கெளரவமா? சாவும் சேர்ந்துதானே உயிர்? மனம் இப்படியே போராடிக்கொண்டிருக்கும்.

***

எங்கள் குலதெய்வத்தை முதன்முதலாக நான் பார்த்த சம்பவம் இப்போது ஏனோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வருகிறது.

நான் அப்போது பையன். ஒரு சமயம் சென்னையிலிருந்து லால்குடிக்கு அண்ணா-அப்பாவை அண்ணா என்றுதான் அழைப்போம்- குடும்பத்துடன் வந்து, ரயிலி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/9&oldid=1495885" இலிருந்து மீள்விக்கப்பட்டது