இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிரியதர்சனி
இன்று - பையன் அவசரமாக 'பைக்'குக்கு முகம் துடைத்துக்கொண்டிருந்தான். வெளியே கிளம்ப ஆயத்தம்.
"பெட்ரோல் விக்கற விலைக்கு எங்கே ஷிகாரி?"
சற்று என்னைச் சிந்தித்துவிட்டு என்னிடம் வந்தான். "நிஜம் சொல்லவா? பொய் சொல்லவா?"
"அது உனக்குத்தான் தெரியும். நீ எதைச் சொன்னாலும் நம்பித்தானே ஆகணும்!"
என் தோள்மேல் கை வைத்தான். "நல்ல அப்பா. அப்பாவாப் பழகவில்லை...ஸ்னேகிதனாவே பழகறேள்... அப்பா, சைட் அடிக்கப்போறேன்."
"இப்படி ஒரு உண்மையைச் சொல்லிப் பெருமையைக் கட்டிக்கொண்டதா எண்ணமாக்கும்."
"சைட் அடிக்கப் போறதாத்தானே சொன்னேன்; கையைப் பிடித்து இழுக்கப்போறேன்; செடி மறைவுக்கு அழைச்சுண்டு போறேன்னு சொன்னேனா? அதெல்லாம் ஒளியும் ஒலியில்தானப்பா. அப்படி என்னேனும் ஆக்சுன்னா, கன்னம் 'பன்' ஆகிவிடும். பெண்கள் இப்போ கராத்தே பழகறாப்பா!"