52 லா. ச. ராமாமிருதம்
அங்கேயே உட்கார்ந்து ஒரு பாட்டம் அழுதாள்.
வாய்விட்டு, நெஞ்சின் கனம் தீர அழுகைக்கு எங்கே போவேன்? நல்ல அழுகை, நல்ல ஸ்னானம்,
நான் தோளில் சாய்ந்தோ, மடியில் முகம் புதைத்து அழக்கூடியவர் யாவரும் மறைந்துவிட்டனர். இப்போது அவர்களை அழைப்பது என் துராசை.
என் வயதுக்கேற்ப, நோய்வாய்ப்பட்டு நாளடைவில் தேய்ந்து, ஒருநாள் மாய்ந்துபோவதில் நியதியிருக்கிறது. ஆனால், இப்படிப்பட்ட மரம் துளிர்க்கும் இன்ப வதையில் நியதி இல்லை. ஆனால் இதுதான் உன் வீலை.
மது படும் வேதனைக்கு மனம் பரிதபிக்கின்றது. ஆனால் அங்கு நியதி தெரிகிறது. அவன் வயதுக்கு நேரும் நோய்வாய்ப்பட்டுத்தான் ஆகணும், ஆனால், மனம் பரிதபிக்கிறது. சாயங்காலே-சாயங்காலம் அதன் அச்சங்களுடன், நாளை எனும் அநிச்சியத்துடன், மங்கல்களுடன், பூஜை அலமாரிக்கெதிரே நிற்கிறேன் உன் படத்துக்கெதிரே. என் தாபத்தினின்று விடுபட உன் காலிலேயே விழுகிறேன்.
அவள் தன் உற்சாகமான பக்தியில், உன் படத்துக்கு மஞ்சள் கோர்த்த மஞ்சள் சரடு அணிவித்திருக்கிறாள். அதன் மங்கலமான வேலியின் பத்திரத்தில் நின்றுகொண்டு என்னைச் சிரிக்கிறாய்
ஆ-!- இப்போது உன் எதிரே நிற்கையில் கிணற்றில் தோன்றிய பிம்பம் யார் என்று ஓரளவு யூகிக்கத் தோன்றுகிறது. படலம் விலகுகிறதா?
ஜன்மம் எனும் முடிவற்ற நினைவு அதில் எங்கோ எப்பவோ புதைவுண்ட எண்ணமாய் நீ உன் படுகையினின்று உன் வேளையில் கிணற்றுள் பிம்பமாய் மேல்