54 லா. ச. ராமாமிருதம்
மாலை நேரங்கள் பயமாயிருக்கின்றன: பயங்கள் தலைவிரித்தாடும் வேளை அப்போத்தான்.
என்னை அலசிப் பார்த்துக் கொள்கிறேன். மனதைச் சாட்டையாலடித்துக் கேட்கிறேன். மனம் மருள்கிறது. உடலின் வேட்கை அன்று இது. மனம் துணைக்குத் தவிக்கிறது. ஒரு பாதி குருதி சொட்ட தனிமையின் ஏக்கத்தில் நிற்கிறேன்.
ஒரு எண்ணம் தோன்றுகிறது. இதோ, இந்தக் கிணற்றடியில் பாதாமி மரத்தின் கீழ், பாறாங்கல்மீது நான் உட்கார்ந்திருக்கையிலேயே என் எண்ணத்தின் தீவிரத்தில், கிணற்றில் பார்த்த பிம்பத்தின் உருவில் உன்னை நான் சிருஷ்டிக்க முடியாதா? மாலையில் செவ்வான குண்டத்தினின்று, அல்ல இந்தக் கிணற்றிலிருந்தே நீ ஏன் எழக்கூடாது? தவம் என்பதே என்ன, ஒரு எண்ணம், ஒரே எண்ணத்தின் தீவிரம்தானே!
ஒரு பாதாமிக் காய் என் தலைமீது விழுந்தது. என்ன, என்னை மண்டையில் தட்டி உட்கார வைக்கிறாயா?
நான் பைத்யமே ஆகிவிட்டேனா?
அவளுக்கும் அவளுடைய வெண்டைச் செடிக்கும் ஏதோ பேச்சு மெளனத்தில் நடந்துகொண்டிருக்கிறது.
வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்கிறேன்.
மது, அவன் தனியாயில்லை. நேரே என்னிடம் வருகிறார்கள். மஞ்சள் க்ரீம் ஜிப்பாவில் மெலிந்து, உயரமாய் வருகிறான்.
"அப்பா, அம்மா சேர்ந்து நில்லுங்கோ. எங்களை ஆசீர்வதியுங்கள். நமஸ்கரித்து எழுந்து நிற்கிறார்கள். அவளுக்குச் சேவிக்கத் தெரியவில்லை. மண்டியிட்டு, தலை