பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. அவள் அழட்டும்!


ஞானசீலனுக்கும், குழலிக்கும் எப்படி உறவு ஏற்பட்டது?

மூச்சுக்கு மூச்சு - பேச்சுக்குப் பேச்சு "அண்ணா... அண்ணா...” என்கிறாளே, அவ்வளவு பாசம் பொங்க என்ன காரணம்?

குழலியின் உடன் பிறந்தவன் அல்லன், ஞானசீலன். ஆனால், உடன் பிறந்தவனுக்கும் மேலாக அவனை மதிக்கிறாள், குழலி, அதற்கு என்ன காரணம்?

குழவியே அந்தக் கதையைக் கூறினாள்.

"இருபது மாதம் இருக்கும். முன் இரவு நேரம். பிசி பிசி"ன்னு மழை தூறிச்சு. ஒரு தோழியைப் பார்த்திட்டு வீட்டுக்குத் திரும்பிக்கிட்டு இருந்தேன். தெருவிலே ஈ, காக்கை இல்லே. பயத்தோட நடந்தேன்.

திடுதிப்னு யாரோ ரவுடி ஒருத்தன் எக்கச்சக்கமான குடிவெறியிலே, என்னை மடக்கி மறிச்சு, என் கையைப் பிடிச்சு இழுத்து, ‘ஏ, சின்னப்பொண்ணு! என் பின்னாலே மூச்சுக்காட்டாம ஒடியா. இல்லாட்டி, உன்னை குளோஸ் பண்ணிப்புடுவேன்!'ண்னு மிரட்டினான்.

எனக்குக் கதிகலங்கிப் போச்சு. அலறினாலும் ஆபத்து. தெய்வமே! அப்படின்னு நெஞ்சுக்குள்ளறவே அழுதேன்.