பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

'இந்த எட்டுப் பேருக்குள்ளே, யாருக்குத்தான் லாட்டரிப் பரிசு கிடைக்கப் போகுறதோ?’ நினைத்துப் பார்த்த மாத்திரத்திலே,அவளது அடி மனத்தில் எக்காளச் சிரிப்பு ஒன்று சீறிச் சிதறியது! ஆம்; எல்லா வகையிலும் என் மனதுக்குப் பிடித்தமான ஒருவரை எனக்கு எல்லா வழியிலும் பொருத்தமான ஒருவரை எனக்குக் கணவராகத் தேர்ந்தெடுப்பேன், நான். அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிற அந்த மனிதர் ஊரறிந்த உயர்வு மனப்பாமையை மதித்தும் போற்றியும் நடக்கத் தெரிந்தவர் என்று நான் நம்பினால்தான், அவர் என் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, எனக்கு நாயகனாக ஆகவும் முடியும்!... ஆமாம்; இது என் வாழ்வுப் பிரச்சினை: ஊர் உலகம் பற்றி எனக்குக் கவலை இல்லை! தவிரவும், சுதந்திரப் பறவையான இந்த டாக்டர் ரேவதியின் சுதந்திர உரிமையாக்கும் இது! இந்த உரிமைக்கு, உயிரால் உறவு சொல்லத் தெரிந்த - உறவு காட்டத் துணிந்த அசலான மனிதர் ஒருவர் கிடைத்தால்தான் எனக்குப் புது வாழ்க்கை கிடைக்கும். இதுவேதான் சத்தியமான, தர்மமான உண்மையான என் முடிவு ஆகும். ஏன் தெரியுமா? எனக்கு நான் தான் விதி!... அந்த விதிதான் டாக்டர் ரேவதி ! டாக்டர் ரேவதி ஒன்றும் கொக்கு ‘இல்லை. அவள், ஆமாம், நான் விதியின் நாயகியாக்கும்! -என்னென்னவோ நினைவுகள், இனம் ரிந்தும், இனம் புரியாமலும் என்னென்னவோ ராகங். ளில் கொட்டி முழங்கின.

ஜோடிப் புறாக்கள் இருட்டிலே வெளிச்சத்தை அனுபவிக்கப் புறப்படுகின்றன போலும்!

அவள் நாணம் பூத்தாள்; நாணத்தின் மென்மையான முகத்தோடு, அந்த முதல் இரவை நினைவு கூர்ந்தாள்;நீ என்னோட நேசமான, பாசமான, அன்பான மனைவி என்பன விடவும், என்னோட முதல் மரியாதை அளிச்சு அங்கீகரிச்சு ஏற்றுக்