பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

புனிதமான திருமணம்கூட வெறும் கிள்ளுக்கீரை தான் ஆகிவிட்டதா?

அவள் கேட்ட கேள்வியே அவளை மடக்கிப் போட்டுச் சுட்டது; சுட்டெரித்தது. திண்டாடினாள்; திக்குமுக்காடினாள். அன்றைக்கு ஏற்பட்ட தாம்பத்தியப் பிணக்கு விபரீதம் ஆகிவிட்டது. மனம் இருந்திருந்தால் அந்த ஊடல் அந்நியோந்நியமான கூடவிலே சுபம் கண்டிருக்க முடியாதா? அதற்கு விவாகரத்துதான் தலையெழுத்தாக அமைய வேண்டுமா?

ஞானசீலன் பேரிலேதான் தப்பு. அந்தத் தப்பை மன்னித்திருக்க முடியாதா, என்ன? எங்கோ தொடங்கிய எதை எங்கோ முடிந்தது.

காகிதங்களை வேண்டா வெறுப்போடு குப்பைக் கூடையில் வீசி எறிந்தாள். மாத்திரைகளை எடுத்தாள். எடுத்த மாத்திரைகளையும் மேஜைக்கு அடியிலேயே ஆத்திரத்தோடு போட்டுவிட்டு, அலங்கோலமாக எழுந்தாள்.

வலி மிஞ்சியது. வலிக்கட்டுமே ! உயிர் போய்விடுமா, என்ன? அவமானம் மிஞ்சியதுதான் மிச்சம்!

அந்தரங்கக் கூடம் கைதட்டி அழைக்கிறது. ஒரு வேளை அது கைகொட்டி அழைத்திருக்கலாமோ?

கூடத்தில் பல வகை அழகுகளும் பல வழிகளில் சொல்விச் சொல்லி வழிந்தன. நவீன காதல் சுயம்வரம் நடக்கவிருக்கும் மண்டபமென்றால், அங்கே நவநாகரிகம் கண்சிமிட்டிக் களிநடனம் புரியவேண்டாமா? ரேவதிக்கு உயிர்த் தீ பற்றி எரிகிறது. பானங்கள் சிதறின. நாற்காலிகள் முட்டி மோதிக் கொண்டு புரள்கின்றன.

மார்பில் ஊசலாடிய பதக்கத்தையும் சேர்த்து அழுத்திப் பார்த்தாள், ரேவதி. காம்பு முனைகில்