பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

17

சட்டென்று நர்மதா குனிந்து அவரை நமஸ்கரிக்கவும், ஒ ஹோ! பட்டப்பாவின் மனைவியா? என்று கேட்கவும் சரியாக இருந்தது.

“த்தோ வந்துட்டேன். கங்கம்மமா பூக்கட்ட கூப்பிட்டா”என்ற படி பூரணி கிளம்பும்போது கங்கம்மாவே அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள்.

“இங்கதான் சாப்பிடறது. பட்டப்பா கல்யாணத்துக்கு தான் வரல. இங்கே சாப்பிடேன். இலைபோடுடி நர்மதா”

இலை போட்டாயிற்று. நர்மதாவே சாப்பாடும் போட்டாள்.

“இப்படி வாழைத்தண்டு மாதிரி கைகாளா நீண்ட நீண்ட விரல்களா? நெற்றியிலே தவழும் கூந்தலா? அதிர்ஷ்டம் சிலபேரை எப்படி வளைச்சு பிடிக்கிறது பார்த்தியா? இந்த நோஞ்சான் பட்டப்பாவுக்கு இப்படி வெண்ணெய்ச் சிலை மாதிரி வழ வழன்னு ஒரு மனைவி கிடைச்சிருக்காளே”

“சரியாச் சாப்பிடுங்கோ. பாயசம் எங்கயோ ஒடறது” பூரணியின் குரலில் கடுமை ஏறியது. மனைவியின் கடுமையான குரலையும், முகத்தையும் பார்த்தவாறு பாலு சாப்பிட்டு முடித்தான். இருந்தாலும், அவன் பார்வை அடிக்கடி நர்மதாவின் பக்கமே சென்றது.

நர்மதா வெற்றிலைத்தட்டில் அழகாக இரண்டு “பீடாக்கள்” செய்து எடுத்து வந்து,

“பூரணி அக்கா! உங்களுக்கும், அவருக்கும்...” என்று கொடுத்தாள்.

இதற்குள் வெளியே போயிருந்த பட்டப்பா ஒரு கட்டு மல்லிகைப் பூவோடு வந்து சேர்ந்தான்.

“பூரணி அக்கா! இந்தாங்க. ஜடை தைக்க”

“யாருக்குடா பட்டப்பா” அவன் நெளிந்து கொண்டே சிரித்தான். உக்கும்... “ஒண்ணும் தெரியாதாக்கும்” என்றான். பாலுவும், பூரணியும் கண் சிமிட்டி சிரித்துக்கொண்டார்கள்.

நர்மதா வெட்கத்தால் சிவந்து போனாள்.

அன்று இரவு எல்லா இரவுகளையும்போல் அல்லாமல் புதுமையாக இருந்தது. நிலவு, மலர்கள், சந்தணம் என்று