பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அவள் விழித்திருந்தாள்

 "கொஞ்ச நாளைக்கு உன் அம்மாவோட ஊருக்குப் போயிட்டுவாயேன்"

"எதுக்கு"

"ஒரு மாறுதலுக்கு" "இங்கே அக்காவை யார் பாத்துப்பா?

"ஒரு ஆளைப்போட்டு நான் கவனிச்சுக்கறேன்" "நான் போகலை". "ஏன்?" 'பிடிக்கலை...அக்காவை விட்டுட்டுப்பபோறது பாவம்." "நான் பண்ணியிருக்கிற பாவத்துக்கு முன்னாடி இதெல்லாம் பாவமில்லை. போயிட்டு வாயேன்"

நர்வதா விருட்டென்று எழுந்தாள். கணவனிடம் சென்று அவனை நெஞ்சாரத்தழுவிக்கொண்டாள். அவள் இந்தமாதிரி செய்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. குமுறி அமுதாள்.