பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



116 உன்னதமான படைப்பாளிக்கெல்லாம் இப்படி ஒரு குறை இருக்க முடியுங்களா?

அதாவது, உங்களுடைய சிறுமையில் உங்க ஸ்கேல்ல எடுத்து அவனை அளந்து பார்க்கிறீங்க. இந்த ராஜேந்திரன் கையில் கஜக்கோல் இருக்கு. ஏன்னா அவன் துணிவியாபாரி. பால்காரன் காலையில் பால் கொண்டு வருகிறான். அளப்பதற்குப் பாத்திரம் இல்ல. இதுவும் அளவுகோல்தான் இதுல ஊத்துடா'ன்னு ஊத்தச் சொல்கிறோம். நம்ம சிறுமைகளினாலே நாம் சில கொள்கைகளை வகுத்து வச்சிக்கிட்டு இருக்கோம். ஆகவே, இதையே வைச்சு அளந்தோம்னா அவன் புடிபட மாட்டான். அவனை அளக்குறதுக்கு இந்த ஸ்கேல் இல்ல. அவன் குடிக்கிறான். தேவுடியா வீட்டுக்குப் போறான். அவன் என்ன பண்ணுறாங்கிறது பேச்சு இல்லை. அத கவனிக்க வேண்டியவன் ஆண்டவன். இப்படிப்பட்ட கவிஞனை ஆண்டவன் ஒருத்தனாலத்தான் படைக்க முடியும். இந்த வீக்னஸ் அவன் வேணும்னு கொடுத்திருக்கிறான். ஏன் என்று தெரியவில்லை.

117. நான் பாரதிதாசனுக்குமட்டும்னு சொல்லல, பொது வாகவே, இலக்கியவாதிகள், இலக்கியப் படைப்பாளிகள், உயர்சிறந்த படைப்புக்களையெல்லாம் படைச்சவங்களைப் பார்த்தா, அவங்க இந்தச் சாதாரண வெளிப்பொருளா அவங்க வரல.

அவர்கள் வரமுடியாது. அதுல வந்த இதுலேயும் அவன் சாவதானமாத்தான் இருப்பான். நம்மைப் போல ஸ்ரீமான் போஜனமாகத்தான் இருப்பானே தவிர, ஒரு புதுமைப்பித்தனாகவோ, பாரதிதாசனாகவோ, ஜெயகாந்தனாகவோ இருக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/102&oldid=493455" இலிருந்து மீள்விக்கப்பட்டது