பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்■105
கணக்கர் தம்திறம் கேட்ட காதைனு எல்லாத்தையும் இரண்டு இரண்டு வரியில... உன்னுடைய சமயம் என்னன்னு சொல்ல வேண்டியது. அத டிஸ்கஸ் பண்ண வேண்டியது. அது இலக்கியமே அல்ல. அதுனாலதான் அது செத்துப் போச்சு.
139. அதுக்குக்கூட தகுதியில்ல
அதுக்குக்கூடத் தகுதியில்லையாம். மனுஷத் தன்மை இருக்கணும். அதுவும் விதி இருந்தாத்தான் வரும். இல்லை. இல்லை. விதியற்றவன்னா தகுதியில்லாதவன். நான் சொன்னேன், அமெரிக்காவிலேயே பேசினேன். harlots இல்லாத உலகமே கிடையாது. எல்லா நாட்டிலுமே உண்டு. கிரேக்கம், ரோமானியம், எகிப்து, மெசபடோமியா, சுமேரியா எல்லா நாகரிகத்திலேயும் hariots உண்டு. அவனெல்லாம் கேவலப்படுத்துனான். எங்களவன் அதையெல்லாம் பெருமைப் படுத்தினான். இது ஒரு 'சர்ப்பிரைஸ் அதுக்குனு ஒரு திணையைப் பிரித்தான். மருதத் திணைனு பிரிச்சதுமட்டு மில்ல, பிரிச்சான் அவளை. காதல் பரத்தை, இல் பரத்தை, சேரிப் பரத்தைனு. எல்லா ஊர்லேயும் தினம் உடம்ப விக்கிற வங்க இருப்பாங்க. சேரிப்பரத்தைய லிஸ்டுலேயே விட்டுட்டான். அப்புறம் லிஸ்டுல 2 இருக்கு அதுல ராங்க் இருக்குது. காதல் பரத்தைனு பேரு கழுத்துல கயிறு கட்டல்லேயே தவிரப் பாக்கியெல்லாம் பொண்டாட்டி தான் - உதாரணம் மாதவி. இந்தப் பெண்டாட்டிக்கு உள்ள அதே வாழ்க்கையை வாழ்கிறவள் அவள்.