பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்25



வேண்டும். ’அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' என்பது தமிழர்களுடைய கொள்கை. அந்தக் கொள்கையின் அடிப்படையிலே இந்த நாலாயிரம் பாடல்களைப் பாடுகிறான். அறத்தின் மூர்த்தி போரிடுகின்றான். அவர்களுடைய படையை நோக்க- இவனுடைய படை-படை என்று சொல்வதற்குத் தகுதியில்லாத படை என்றாலும் - அறம் இவனுக்குத் துணையாக நிற்கிறது. எதிராளி படை பலத்தின் எல்லையிலே நின்றாலும் அறத்தின் அடிப்படையில் இல்லாமையாலே அது தோற்கத்தான் செய்யும் என்பதை எடுத்துக்காட்டுவது மிக இன்றியமையாதது.

இந்தச் சோழப் பேரரசு இந்த அறத்தின் அடிப்படை யிலே செல்லவேண்டுமென்று கம்பன் நினைக்கிறான். அப்பொழுதுதான் கிழக்குச் சாளுக்கியர், மேற்குச் சாளுக்கியர், புலிகேசி முதலானவர்கள், பல்லவர்கள் இவர்களை யெல்லாம் வெல்ல முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இதை ஒரு கருவியாகப் பயன் படுத்துகிறான். ஆனால், மாபெரும் கவிஞன் ஆதலாலே, இதை வெளிப்படையாகக் காட்டமாட்டான். உள்ளுறைப் பொருளாகக் கருத்தை அமைத்துப் பாடுகிறான். இந்தச் சமுதாயம் முன்னேற வேண்டுமானால் அற அடிப் படையில் நின்று போரிடவேண்டும்.

மேலே உள்ள அத்தனை பகைவர்களோடு இவர்கள் போரிட வேண்டும். ஆகவேதான், இராவணாதிகளுடைய பலங்களையெல்லாம் பெரிதாகக் காட்டி, இராகவன் தன்னந்தனியாக நின்று அறத்தின் அடிப்படையில் போரிடுகின்றான் என்பதைக் காட்டுகின்றான். ஆகவே நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. போரை இவ்வளவு பெரியதாக நாலாயிரம் பாடல்களில் பாடியதற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/33&oldid=480974" இலிருந்து மீள்விக்கப்பட்டது