பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2



ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. வரிசைப் படுத்தினால், இந்த இலக்கியம் நடந்து வந்த சுவடும், கடந்து வந்த காலப் போக்கும் இன்னதென்று புரியும். பாடல்களை இனம் பிரித்து வகைப்படுத்தியிருக்கிறார்.

"ஏர் முனைக்கு நேர் எதுவுமே இல்லை" என்று எழுதிய இவரது விவசாயப் பாடல்களுக்கு 'நேர்' திரைப் பாடல்களில் எதுவுமே இல்லை.

பல வருடங்களாக ஒவ்வொரு தைத்திங்களும், வானொலியில் ஒலிக்கும் இவரது "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்" என்ற பாடலுடன் தான் பிறந்து கொண்டிருக்கிறது.

"கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவது உண்மைக் காதலே" ஆம்! கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்திடும் வண்ணத் தமிழ்ப் பெண்கள் உலா வரும், இவரது பாடல்களின் மேல் மக்களுக்கு உள்ள காதல் கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமையை இன்றும் தருவது உண்மையே.

"நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே" என்று நெஞ்சை உருக வைக்கும் சோக கீதங்கள்.

"வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே" எனும் தத்துவப் பாடல்கள், இப்படி இன்பம், துன்பம், சமூகம், தத்துவம், நகைச்சுவை, என்று எத்தனையோ வகையான இறவாப் பாடல்களை இவரது பேனா முனை தந்திருக்கிறது.

ஆக, கலையும் இலக்கியமும் நமக்கு இருக்கிறது என்பதற்குச் சான்றாகத் தம் அனுபவங்களையும், அறிவின் திறத்தையும் தமிழ்த் தொண்டாக்கி அரும்பணியாற்றிய பெருந்தகை திருமிகு மருதகாசி அவர்கள் நீடு வாழவும், நிறைபுகழ் பெறவும் இறைவனை வேண்டுகிறேன்.

அன்பன்

A. K. வேலன்