பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123


ஆண் : சீருலாவும் இன்ப நாதம்
ஜீவ சங்கீதம்!
பெண் : செவி நாடும் தேன் சுவை யன்றோ
திருவே உமது கானம்  (சீரு)


ஆண் : ஆவியே இயல் இசை போலே நாமே
அன்பினால் கலந்தே மகிழ்வோம்.
பெண்: ஏழை எனது தாழ்வை அகற்றி
வாழ்வு தந்தீர் எல்லாம் என் பாக்கியம்  (சீரு)


பெண்: நாதத்தால் மனம் வசமாகும் போது
பேதம் பாராது!
ஆண் : காதலலைகள் மோதும் மனதில்
தாழ்வு உயர் வேது?
பெண் : ஆசை மொழியே பேசி எனையே
ஆளும் அரசே எல்லாம் என் பாக்கியம்!
ஆண் } சீருலாவும் இன்ப நாதம் ஜீவ சங்கீதம்!
பெண்} ஹம்மிங்
வடிவுக்கு வளைகாப்பு-1962
இசை : K. V மகாதேவன்
பாடியவர்கள் : T. M. செளந்தரராஜன் & P சுசிலா