இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
235
- நான் சொல்லும் ரகசியம்
- கண் காணும் அதிசயம்
- நன்றாக எண்ணிப் பாருங்க
- இதை அவசியம்-அவசியம்-அவசியம்
- (நான்)
- இதை அவசியம்-அவசியம்-அவசியம்
- உணவுக்கு ஒரு கும்பல்
- போராடும் வேளையில்
- பதவிக்கு ஒரு கும்பல்
- போராட்டம் நடத்துது!
- ஒய்வில்லா வேலையால்
- உசுரை விடும் ஏழையின்
- உழைப்பாலே ஒரு கும்பல்
- உல்லாசம் தேடுது!
- (நான்)
- உல்லாசம் தேடுது!
- கல்யாணம் செய்யவே
- சிங்காரப் பந்தலும்
- கச்சேரி சதுராட்டம்
- ஊர்வலமும் வேணுமா?-இவை
- இல்லாமல் எவரேனும்
- கல்யாணம் பண்ணினால்
- இன்பசுகம் பிள்ளை குட்டி
- இல்லாமல் போகுமா!
- (நான்)
- இல்லாமல் போகுமா!