பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254


சமரசம் உலாவும் இடமே-நம்
வாழ்வில் காணா (சமரசம்)
ஜாதியில் மேலோரென்றும்
தாழ்ந்தவர் தீயோ ரென்றும் பேத மில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடுங்காடு!
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு!
உலகினிலே இது தான்  (நம் வாழ்)
ஆண்டியும் எங்கே? அரசனும் எங்கே?
அறிஞனும் எங்கே? அசடனும் எங்கே?
ஆவி போனபின் கூடுவாரிங்கே!
ஆகையினால் இது தான்!(நம் வாழ்)
சேவை செய்யும் தியாகி! சிருங்கார போகி!
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி!
எல்லோரும் இங்கே உறங்குவதாலே
உண்மையிலே இது தான்(நம் வாழ்)
ரம்பையின் காதல்-1956
இசை : T. R. பாப்பா
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்