பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70


வளர் பிறையே வானமுதே
மாசிலாத பொன்னே!
மண மலரே வறுமையினால்
வதங்கிடும் என் கண்ணே!
தளராத என் இதயம்
தளர்ந்ததடா இன்று!
தனிமையிலே தவிக்குதடா
உங்கள் துன்பம் கண்டு!  (கோமள)

நல்லதங்காள்-1955


இசை : G. ராமநாதன்
பாடியவர்: ஜிக்கி