இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
89
ஆண் : கொடுத்துப் பார்! பார்! பார்! உண்மை அன்பை!
நினைத்துப் பார்! பார்! அதன் தெம்பை!
உயர்வு தாழ் வெனும் பேதத்தைப் போக்கும்!
இருவர் வாழ்வினில் இன்பத்தைச் சேர்க்கும்!
(கொடு)
ஆண் : கண்ணுக்குள் மின்னல் வெட்டைக் காட்டுகின்ற :::::::::::::::::::::::::::::::::::::::::::கண்ணம்மா!
கன்னத்தில் ஆப்பிள் வந்து காய்த்திருப்பதென்னம்மா!
உண்பதற் காகுமா? என் பசி தீருமா?
உள்ளதைக் கேட்டாலே என் மீது கோபமா?
(கொடு}
பெண் : கற்பனை உங்களுக்கே சொந்த மென்ற எண்ணமா?
சர்க்கரை பாகு உங்கள் நாவில் வந்த தென்னம்மா
பிறவியில் வந்ததா? பெண் அன்பு தந்ததா?
இரவெல்லாம் உறவாடும் கனவாலே சேர்ந்ததா?
(கொடு)
ஆண் : ஆட்டத்தில் தோகையோடு போட்டி போடும் முல்லையே!
ஓட்டத்தில் என்னை நீயும் வெல்வதற்கு இல்லையே!
மருத-5