பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 117 அம்மாவாக பார்த்த பார்வை, இப்போது, அம்மாவை, பெண்ணாகப் பார்ப்பதுபோல் தோன்றியது. இப்போதெல்லாம், ஏகாம்பரம், ஆண்டுக்கணக்கில் பழகிப்போன இந்தக் கோவில் பக்கமோ, கோவில் உள்ள திசைப் பக்கமோ வருவதில்லை. மெய்யாகவே மழைக்காகத்தான் ஒதுங்கினார். வீட்டுமாடியில் ஞானப் பயிற்சி செய்துவந்தவர். அன்று, ஒரு மாறுதலுக்காய், வெட்ட வெளியில், அதைச்செய்வதற்காக வெளியில் வந்தார். கடற்கரையைப் பார்த்துத்தான் நடந்தார். ஆனாலும் சொல்லாமல் கொள்ளாமல் மழை வந்துவிட்டது. மேகம்கருக்காமல், ஆகாயம் வேர்க்காமல் பருவமற்ற திடீர்மழை. ஒருவகையில் சொல்லப்போனால், அவரைப்போலத்தான். நாடாமல் கிடைத்த ஞானம்போல், தேடாமல் வந்த மழை. மழை பிடித்துக்கொண்டதும், அந்த கோவில் மதில்ச்சுவரையொட்டி கட்டப்பட்ட பூக்கடைக்குள் தலை மறைத்தார். ஒலைச்சிதைவுகள் ஈரக்கசிவோடு, தும்பைப்பூச் சட்டையில் சாம்பல் வண்ணம் பூசியதும் கோபுர வாசலுக்குள் வந்தார். மழைத்துறல்கள் முகத்தில் அடித்தன. இது அவர் முகத்திற்கோ மூச்சிற்கோ ஏற்றதல்ல. ஆகையால், உள்ளே போனார். வாசலைத் தாண்டியதும் மொட்டையான வெட்டைவெளி அதற்குள், சன்னமான மழைத்துாறல்கள் சாட்டைகளாயின. அடிபொறுக்க முடியாமல் அவர் ஓடினார். வெட்டவெளி கடந்து ஆலயத்தின் வெளிப்பிரகாரத்திற்குள் நுழைந்தார். கூட்டமும் கும்பலுமாய் ஒரே களேபரம் கல்தூண்களில் எழுந்த அனுமனுக்கும் முருகனுக்கும் இடையே நடந்து, நடுநாயகமான வாசல் வழியாய் உட் சுற்றுக்கு வந்துவிட்டார். உள்ளே பார்க்காமல் வெளியே மழையையே பார்த்தபடி நின்றார். அது விடுவதாகத் தெரியவில்லை. எப்படி வந்தாரோ அவருக்கே தெரியாது. இந்த துர்க்கைச் சிலைக்கு முன்னால் வந்துவிட்டார். பழக்க தோசமாக