பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 3 இன்றைக்கு தூக்கம் வந்தாலும் அதை வர விடக்கூடாது என்று ஒரு வைராக்கியம். காரணம் என்னவாக இருக்கும்? அந்தப் படுக்கையறையில் அப்படியே அசைவற்றிருந்த நான், அந்த அமாவசை இருட்டில் மங்கிய பச்சை புல்பின் ஒளி, அவள் சிவப்வு முகத்தில் சிந்தி ஒரு அதிசய கலவை நிறத்தை - சிவப்பு வட்டத்திற்கு பச்சை வேலி போட்டது போல் காட்டியதுண்டு. சில வேளைகளில், என் மனைவி என் காதுகளை திருகி, கண்ணிமைகளை நிமிர்த்தி, இறுதியில் மூக்கையும் வாயையும் தனது உள்ளங்கையால் ஒரு சேர அடைத்து என்னை விழிக்கச் செய்து, முகத்தில் முகம் போடுவாள். அந்த மாதிரி அத்திப்பூ சந்தப்பங்களில் அவள், அழகு தேவதையாய் தோன்றுவாள். அவளின் பிரிந்த உதடுகள் அற்புதத் புன்னகையோடு கோடு காட்டும். ஆனால், இப்போது தூங்கிக் கொண்டிருக்கும் அவளைப் பார்க்க என்னவோ போலிருந்தது. செத்துப் போனவள் போல், வாய் பிளந்திருந்தது. ஒரு காலை செங்குத்தாய் துரக்கி, மறுகாலை, முப்பது டிகிரியில் சாய்த்து அசிங்கம் அசிங்கமாய். அதுவும் உருமி மேளம் மாதிரியான குறட்டை..... என் பார்வை கூட தாள மாட்டாது மார்பகத்தை முந்தானையால் மூடிக் கொள்கிறவள், இப்போது. இதையெல்லாம் சொல்லப் படாது. அவள் திருக்கோலத்தை இந்தத் துக்கம் அலங்கோலமாக்கி விட்டது. தூக்கம் உயிரினத்தை மூச்சை முடிக்காமலே, பிணமாக்கும், எமதுரதன் வருவதை உரைக்கும் ஆரூடம். இந்தத் துக்கம் எனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம். நான் படுக்கை அறையிலிருந்து வெளிப்பட்டேன். கூடத்தில் அங்குமிங்குமாய் நடமாடினேன். பிறகு எதிர்த்திசையில் சுவரோடு சுவராக இருந்த அதே நிறத்தில், இருந்த கதவை தள்ளிக்கொண்டு, உள்ளே போனேன். அங்கே என் மகள் 'பிளஸ் டு மீனா, மேவாயையும் முன்