பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 151 என்பது போன்ற நெருக்கம். ஒரு பாவனை. அந்த விஸ்வேஷ்வரத்தை வைத்தகண் வைத்தபடி பார்த்தவர், ஒரே சமயத்தில் அநேகமானார். அநேகமாக அவரே ஆகாயமாகி, அவை பிரசவித்த நட்சத்திரங்களானார். அப்போது பார்த்து, அந்தக் குலவுபேரண்ட தொகுதியில் இருந்த அவரை ஒரு குரல் இழுக்கப் பார்த்தது. முடியாது போகவே தொட்டுப் பார்த்தது. அதுவும் இயலாமல் போகவே, தட்டிப் பார்த்தது. பொன்னம்பலம், வீறிட்டுக் கத்தினார். பொதுவாக, ஒருவர், ஒன்றுடன் ஒன்றும்போது, அவருக்கு தேள் கடித்தாலும் உறைக்காது. அல்லது ஒரு பூவை எறிந்தாலும் அலறிப் புடைப்பார் என்ற மனோ ரசவாதத்தை உணர்ந்தவர் போல், அவரைத் தொட்டவர், அவரை ஆசுவாசப் படுத்தினார். பின்னர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். "என்னோட பெயர் குப்புசாமி. இந்த அப்ஸர்வேட்டரியில், ஒரு விஞ்ஞானி. ஒங்களை மரியாதை நிமித்தம் பார்க்க வந்தேன்." பொன்னம்பலம், அவரை நெடுநாள் பழகியவர்போல், முகம் பார்க்காமலே அப்படிப் பார்க்க வேண்டுமென்றே தோன்றாமலேயே கேட்டார். "இந்த மாதிரி பெரிய பெரிய நட்சத்திரங்களை எங்கேயும் பார்க்கலே, ஒவ்வொன்றும் பத்து கிலோ தேறும் போலுக்கே" "நீங்கள் வெயிட் அன்ட் மெஷர்" ஆபீஸ்ல வேலை பார்த்திருப்பீங்கன்னு நினைக்கேன். பரவாயில்ல. இந்த நட்சத்திரங்கள் எல்லா இடங்களிலும் காணப்படுவது மாதிரிதான் இங்கேயும் தெரியுது. ஆனால் இங்கே திட்டமிட்ட இருள்மயம். சமவெளியில் மின்சார விளக்குகளை உள்வாங்கிய கண்களுக்கு மேலே தொங்கும்