பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 65 அதனால்தான் விட்டுக்கொடு. இல்லையானால். நம் இருவருக்கும் மதிப்புக் குறைவு என்கிறேன். "என் பக்தனை என்னால் கைவிட முடியாது முருகா. என் வரம் உன்னாலும். உன்வரம் என்னாலும் பறி போய்விட்டது. ஆகையால் என் பக்தனுக்கு. அந்த வேலை கிடைக்க ஒரு மானுட வழியை பின்பற்றியிருக்கிறேன்." ‘என்னவாம்.? 'என் பக்தன் டைரக்டர் ஆவதற்கான பைல் மினிஸ்டர். செக்கரட்டரி. வரைக்கும் போகவேண்டும் அல்லவா? இந்த இருவர் மனதிலும். பெருமாளுக்கே பெரிய பதவி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டேன்.ஹா. ஹா. ஹா...' 'ஆபீஸ் விவகாரம் புரியாத ஐயப்பா. நீ அமைச்சர் மனதில் புகுந்தாய். நானோ, அவரைவிட பலசாலியான அவனது நேர்முக உதவியாளர் மனதில் புகுந்துள்ளேன். நீ ஐ.ஏ.எல். செக்ரட்டரி மனதில் புகுந்துள்ளாய். நானோ அண்டர் செகரட்டாரி. செக்ஷன் ஆபீஸர் அஸிஸ்டெண்ட் மனதுகளில் புகுந்துள்ளேன். பாரதத்தை ஆள்பவர்கள் அமைச்சர்களல்ல. அஸிஸ்டெண்டுகளும். நேர்முக உதவியாளர்களுமே. புரியுமா உனக்கு: டைரக்டர் ஆவப்போது என் பக்தன் பழனிச்சாமியே. முருகனுக்கும், ஐயப்பனுக்கும் வாயாடல் முடிந்து கையாடல் தோன்றப் போனது. ஆறுமுகம், சேவலின் கொக்கரிப்பில் வேலைத் துக்கினான். மயில் போர்விமானம் போல் பறக்கப்போனது. உடனே, ஐயப்பன், புலியின் உறுமல் பின்னணியில் சக்கிராயுதத்தை எடுத்தான் உடனே கீழே பழனிச்சாமியும், பெருமாளும் ஒருவரை ஒருவர் பாய்ந்து பிடித்தார்கள். அலுவலகர்கள் பிரிந்து, கோஷ்டி பிரிந்து போர் முழக்கம் செய்தார்கள். ஏதோ ஒரு மாஸ் ஹிஸ்டீரியா, எல்லோரையும் ஆக்கிரமித்தது.