பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 75 வீணையும், ஒரு கரத்தில் உத்திராட்ச மாலையும், மறுகரத்தில் எத்தனையோ மகான்களும், கவிஞர்களும், மாமேதைகளும் படைத்த தத்துவக்கடலை ஒர் ஏட்டுச் சரமாய்க் கொண்ட இன்னொரு கரமும் கொண்ட சரஸ்வதி தேவி. இசக்கியா பிள்ளை ஒவ்வொரு தெய்வப்படத்தின் முன்னாலும், ஒவ்வொரு மந்திரத்தைச் சொல்லிக் கொண்டார். ஓம் வக்ரதுண்டாய நம: ஒம் சரவணபவ. ஒம் நமோ நாராயணாய. ஓம் நமசிவாய நம: ஒம் விஸ்வமாத்ா ஜகத்தாத்ரி. ஓம் சரஸ்வதி தேவி நம: சர்வரோக பாப நிவாரணி நம: 'புத்திர் பலம் என்று சொல்லிக்கொண்டே பஞ்சமுக அனுமார்மேல் பூச்சூடப்போன இசக்கியா பிள்ளை, கைப்பூவை, ஆஞ்சநேயரின் உச்சந்தலையில் சூட்டியபடி, அந்தக் கையை எடுக்காமலே, வெளியே தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் வாக்குவதத்தை உற்றுக் கேட்டார். “எத்தனை தடவ ஒனக்குச் சொல்றது. அந்தக் கம்யூட்டர் சென்டர் இல்லாட்டால் இன்னொரு சென்டர். கட்டுன பணம், வீணாச்சேன்னு அப்போவோ நானோ வருத்தப்படுறோமா?" "ஒங்களுக்கு எப்படிக் கட்டுன பணம் வீணானதிலே வருத்தம் இல்லியோ, அப்படி அந்தப் பிரின்ஸ்பால் பயல் என் கையைப் பிடிச்சு இழுத்ததுலயும் வருத்தமில்லை இல்லியா?" "துஷ்டனைக் கண்டால் தூர விலகித்தான் ஆகணும். காலம் கலிகாலம்.”