பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காற்றில் மிதக்கும் இலை போலும், மலரில் எழும் மணம் போலும், காட்டுத் தீயில் அகப்பட்ட பறவை போலும் உள்ளேன். ஆதலால்;

நீயே அரசாள்கின்றாய், உன் முன் எல்லாம் தோல்வியுறுகின்றன, உன் பயங்கரமான புதிய உத்தரவைக் கேட்டு - உன் புதிய மொழியாகிய ’ஜனநாயக’த்தைக் கேட்டு - ஜீவர்கள் அனைவ்ரும் சந்தோஷம் அடைகின்றனர். ஆதலால்;

நீ என்னைத் தழுவி நிற்பதால் நான் மரணத்தை ஏளனஞ் செய்கிறேன். ஏன், சந்தோஷமாய் அதைச் சக்திக்கக்கூடச் செல்கிறேன். ஆதலால்;

ஆம், நீ என்னிடமிருந்து உன் ஆற்றலைத் தவிர ஏனைய ஆற்றலை எல்லாம் கவர்ந்துவிடுகிறாய் ஆதலால்;

என்னுடைய சங்தேகம், எதிர்ப்பு எல்லாவற்றையும் ஒழித்துவிட்டாய் ஆதலால்;

இதுவரை யாராலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இகழப்பட்டவைகளி லிருந்து, காதலே! ஜனநாயகமே! நீ எதையும் தகித்து அழிக்கும் தழலாய் எழுந்துள்ளாய் ஆதலால்.

ஆகையால், காதலே! என்னைத் தகித்து அமரர் உலகேற்றும் இன் தழலாய்! ஆக்குபவளே! அழிப்பவளே! உன்னை நான் புகழ்வேன்!

______