பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீ யார்?

நெறி பிறழ்ந்தவரைக் காப்பாற்றப் புறப்படும் நீ யார்?

உன்னை நீ காப்பாற்றிக் கொண்டாயா?

தன் உயிரைக் காப்பற்ற விரும்புபவன் அதை இழக்கவேணும் என்பதை நீ அறியாயோ?

நீயும் நெறி தப்பியவர்களில் ஒருவனா?

இவர்களில் ஒவ்வொருவரும், நீ அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் அளவு ஒருவேளை அதிகமாய்க்கூட - உனக்குக் கற்றுக் கொடுக்க முடியும் என்பதை நிச்சயமாய் அறிந்துகொள்.

ஆகையால், நீ அவர்கள் பாதத்தடியில் அடக்கத்தோடு உட்கார்ந்து, முதலில் அவர்கள் பேசக் காத்துக்கொண்டிருந்தாயா? உன்னால் அறிய இயலாத இந்தக் குழந்தைகள் முன் பணிவுடன் நின்றாயா?

உனக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள ஆழங் காண முடியாத குழியில், தற்பெருமை, மயக்கம், அறிவுப் பொருமல், வெறுப்பு, அருவருப்பு ஆகியவற்றை எறிந்து விட்டாயா?

உங்கள் இருவர்க்கும் இடையில் உள்ள காற்றைப் போல, உங்கள் இருவர்க்கும் உள்ள

95