இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை
IV
என் கால்-பந்து இப்பொழுது அலமாரியில் :
இப்பொழுது நானேதான் பந்து ;
உலகம் இங்கு மங்கும் உதைக்கும் !
அம்பு எய்வேனோ ? அதையும் மறந்தேன்.
என் அம்பையும் வில்லையும் எல்லாம்,
துக்கம் என்மீதே திருப்பிவிடும் !
v
வானத்தில் அன்று கண்ட நீலமும்
சாந்தியும் 'இன்று உண்டோ ?
விளையாடும் பூமியில் வளர்ந்த மரம் -
அதைப் போர்த்த இலைகள் -
அந்தப் பசுமை இப்பொழுது உண்டோ ?
நான் நேசித்தவை எல்லாம் மாறிவிட்டன .
அப்படியில்லை, மாறுதல் என்னிடம்தான்:
இனி என் மனம் சாந்தி அடையுமோ ?
ஹூட்