பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



என் காதலி ரோஜா மலரானால்

I

என் காதலி ரோஜா மலரானால்,

நான் ஒரு பனித் துளி யானால், -

அந்தச் சிவந்த ரோஜா மலர்க்குள்,

அந்த மெல்லிய மலர்க்குள் விழுவேன்.

என் காதலி அழகி, என் காதலி அழகி,

நான் அவள் அழகைப் பருகுந்தோறும்

அவள் என்னைப் பார்த்து முறுவல் செய்வாள்.

II

என் காதலி கோதுமைக் கதிரானால்,

நான் ஒரு சிறு பறவை யானால், -

அந்தக் கதிரைக் கடித்துக் கொண்டு

நான் அந்தரத்தில் பறந்து விடுவேன்.

என் காதலி அழகி, என் காதலி அழகி,

நான் அவள் அழகைப் பருகுந்தோறும்

அவள் என்னைப் பார்த்து முறுவல் செய்வாள்.

III

என் காதலி பொன் நிறைந்த பொக்கிஷமானால்,

நான் அதன் காவலனானால்,

என் இஷ்டம் போல் அதைத் திறப்பேன்,

இஷ்டம்போல் அதனுள் இருந்துகொள்வேன்.

என் காதலி அழகி, என் காதலி அழகி,

நான் அவள் அழகைப் பருகுந்தோறும்

அவள் என்னைப் பார்த்து முறுவல் செய்வாள்.


22