பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

IV

என் தங்தைக்கு வேலை செய்ய முடியவில்லை,
என் தாய்க்கு நூற்க முடியவில்லை.
நான் இரவு பகலாய் உழைத்தேன்,
ஆயினும் அவர்களைப் போஷிக்க முடியவில்லை.
ராபின் தான் காப்பாற்றி வந்தார்,
கண்களில் நீர் பெருக நின்றார்.
‘ஜென்னி அவர்கள்!பொருட்டு
என்னை மணந்து கொள்!’ என்று
என்னை வேண்டி நின்றார்

V

என் இதயம் இசைய வில்லை,
என் ஜேமியையே எதிர்நோக்கி நின்றேன்:
ஆனால், ஐயோ பெரும் புயல்!
அவன் கப்பல் அமிழ்ந்துவிட்டது!

VI

என் தந்தை வற்புறுத்தினர்,
என் தாய் பேசவில்லை -
இதயம் ஒடியும்வரை நோக்கினாள்.
என்னை மணஞ் செய்து கொடுத்தனர்,
ராபின் கிரே என் கணவ ரானார்.
ஆனால், என் இதயமோ - கடலிலே!

VII

மனைவியாய் நாலு வாரம் ஆகவில்லை,
வாசற்படியில் வருத்தத்தோ டிருந்தேன்,
இதோ வருபவர் யார்? - என் ஜேமிதான்!

24