இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மாலுமியின் மனைவி
I
ஆம், அந்தச் செய்தி உண்மையென்று,
உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா ?
அவர் சுகமா யிருக்கிறா ரென்று -
உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா ?
வேலையைப் பற்றி நினைக்க இதுவா நேரம் ?
இராட்டினத்தைத் தூக்கித் தூர வையுங்கள் -
கோலின் என் கணவர் வந்துவிட்டார் !
நூல் நூற்க இதுவா நேரம் ?
அங்கியைக் கொடுங்கள், கடற்கரை போவேன்,
அவர் கரையில் இறங்குவதைப் பார்ப்பேன்!
அவர் இல்லாத பொழுது
வீட்டில் அழகில்லை,
அதிர்ஷ்டமில்லை, ஆனந்தமு மில்லை !
II
என் சிறு தொப்பியைக் கொடு,
என் சரிகைக் கவுணைக் கொடு,
கோலின் வந்த சுப செய்தியைத்
தோழிகளுக்குச் சொல்ல வேண்டாமா ?
ஆம், அந்தத் துருக்கிச் செருப்பும் -
அந்த நீல மேல்ஜோடும் வேண்டியதே.
என்னை நாடி வருகிறார்,
என்னை நேசிக்கிறார் அல்லவா ?
எல்லாம் அவருக்கு ஆனந்தம் அளிக்கவே !
27